SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

9/11/2018 12:30:21 AM

ஆவடி, செப். 11: ஆவடி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி அடுத்த அயப்பாக்கம் எழில் நகர் 4வது தெருவில் காலிமனை ஒன்று உள்ளது. இங்கு, தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கு சுற்றுப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால், கதிர்வீச்சு பாதிப்பால் பல்வேறு நோய்கள் ஏற்படும். இதனால், குழந்தைகள், நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுவர். எனவே, இந்த செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரவிக்கப்பட்டிருந்தது.  

ஆனாலும், பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதை கண்டித்து, நேற்று காலை பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும், என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறினர். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்