அம்மன் கோயில் தீமிதி விழா
9/11/2018 12:30:14 AM
கும்மிடிப்பூண்டி, செப். 11: கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன வழுதலம்பேடு ஊராட்சியில் உள்ள துலுக்காணத்தம்மன் கோயில் 7ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை தீ மிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் பால் குடம் எடுத்தல், அம்மன் கரகம் ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, வழுதலம்பேடு கிராமத்தில் வசிக்கும் அனைத்து வீடுகளிலும் கூழ் வார்த்தல், அம்மன் சன்னிதியில் வடை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. காப்பு கட்டிய 150 பக்தர்கள், நேற்று முன்தினம் மாலை வேப்பிலை ஆடை அணிந்து, நாக்கில் வேல் தரித்து கோயிலை சுற்றி வலம் வந்து, தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக அவைத் தலைவர் கிருஷ்ணன், கிராம நிர்வாகிகள் சீனிவாசன், சுப்பிரமணி, சுகு, முரளி, கோபால், ஒபசமுத்திரம் முன்னாள் தலைவர் காளத்தி மற்றும் பெரிய வழுதலம்பேடு, ஓபசமுத்திரம், எளாவூர், ராஜபாளையம் கிராம பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்தனர்.
மேலும் செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி மாவட்டம் முழுவதும் 39 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர் முகாம்
பெரும்புதூர் அருகே திமுக பிரமுகர் கொலையில் திருவள்ளூர் கோர்ட்டில் 5 பேர் சரண்: காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
செல்போன் டவருக்கு எதிர்ப்பு செங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம்
மிக்சி, எடை மெஷினில் மறைத்து கடத்திய ₹18 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்: கேரள வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்
பூண்டி நீர்த்தேக்கத்தில் களைகட்டிய காதலர் தினம்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு