SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரவாயலில் காரில் கடத்தப்பட்டவர் அவிநாசியில் விடுவிப்பு

9/11/2018 12:29:49 AM

சென்னை, செப். 11: மதுரவாயலில் காரில் கடத்தப்பட்டவர் அவிநாசியில் விடுவிக்கப்பட்டார். பூந்தமல்லியை சேர்ந்தவர் கணேஷ் (35). பங்குச்சந்தை ஆலோசகரான இவர் வளசரவாக்கத்தில் பங்கு சந்தை அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல கால் டாக்சியில் வந்து கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் ஆலப்பாக்கம் அருகே வந்த போது ஒரு கார் கணேஷ் சென்ற காரை வழிமறித்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் காரில் இருந்த கணேசை அவர்களது காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து கால் டாக்சி டிரைவர் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், பெங்களூரில் பங்கு சந்தை அலுவலகம் நடத்தி வந்த கணேஷ், அங்கு மோசடி செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சென்னைக்கு வரும்போதுதான் கடத்தப்பட்டுள்ளார். எனவே, அதில் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது கூலிப்படையை வைத்து கணேசை கடத்தினார்களா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், கணேஷ் திருப்பூர் அருகே அவிநாசியில் இருப்பதாகவும், கடத்தி வந்தவர்கள் ஆள் மாற்றி கடத்தி விட்டதாகவும் கூறி இறக்கி விட்டதாக தனது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கணேஷ் வீடு திரும்பினார். இதையடுத்து மதுரவாயல் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். கடத்தியவர்கள் யார்? ஏன் பாதியில் இறக்கி விட்டனர். உண்மையில் அவர் கடத்தப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கடத்தல் நாடகம் ஆடுகிறாரா? என மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-11-2018

    21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்