SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தார் பெயர்ந்து குண்டும், குழியுமான சொரக்காய்பேட்டை- நெடியம் சாலை

9/11/2018 12:29:41 AM

பள்ளிப்பட்டு, செப்.11:   பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காய்பேட்டை-நெடியம் செல்லும் தார்சாலையை சொரக்காய்பேட்டை, நெடியம், நெடியம் காலனி, மேலபூடி, கீளபூடி, பொதட்டூர்பேட்டை, பொம்மராஜுபேட்டை, பெருமாநல்லூர், குமாரராஜுபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை வழியாகத்தான் தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சென்று வருகின்றனர். விசைத்தறி நெசவாளர்கள் தங்கள் தொழில் சம்பந்தப்பட்ட பாவுநூல், பீஸ் போன்றவைகள் இச்சாலை வழியாகத்தான் தினமும் ஆந்திர பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

கடந்த பலமாத காலமாக தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இச்சாலை வழியாக  இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து எழுந்து செல்லும் அவல நிலை   ஏற்பட்டுள்ளது.
இச்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. எனவே இச்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்