SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருமுல்லைவாயலில் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் ஆறாக ஓடும் கழிவு நீர்

9/11/2018 12:29:32 AM

ஆவடி, செப். 11: ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
ஆவடி நகராட்சி, 7வது வார்டான திருமுல்லைவாயல், பழைய ஈஸ்வரன் கோவில் தெரு அமைந்துள்ளது. இங்கு ஏராளமான வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்களும் உள்ளன. இந்த தெருவை பயன்படுத்தி வள்ளலார் நகர், தென்றல் நகர், எட்டியம்மன் நகர், மாசிலாமணி ஈஸ்வரர் நகர், பழைய எம்.டி.எச் சாலை, ஜாக் நகர் உள்ளிட்ட பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த தெருவின் எல்லை பகுதியில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோயிடல், சிவன் கோயில் ஆகியவைகளும் உள்ளன. இதனால் ஈஸ்வரன் கோயில் தெரு வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள், பக்தர்கள் சென்று  வருகின்றனர். இந்த தெருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு, வீடுகளில் முன்பு கழிவுநீர் தொட்டிகள் (செப்டிக் டேங்க்) அமைக்கப்பட்டு உள்ளன.

 இந்த தொட்டிகளில் கழிவுநீர் நிறைந்தால் அதனை வீட்டு உரிமையாளர்கள் அகற்றுவது கிடையாது.  இதனால் வீடுகளில் உள்ள தொட்டி நிறைந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இந்த கழிவுநீர் தெருவில் உள்ள தார் சாலையில் ஆறாக ஓடுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,  வீடுகளில் உள்ள  தொட்டியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தார் சாலையில்  தேங்கி சேதமடைந்து  குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால்  வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நடமாட முடியவில்லை.  மேலும், சாலையில் கழிவுநீர் தேக்கத்தினால் கொசுக்கள் உற்பத்தியாகி கடிக்கிறது. பெரியவர் முதல் சிறியவர் வரை பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகராட்சி சுகாதார துறை ஆய்வாளரிடம் பல முறை கூறி உள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், வீடுகளில் உள்ள தொட்டியில் இருந்து கழிவுநீரை அகற்ற நகராட்சி ஒப்பந்ததாரிடம் சென்று கூறினால், அவர்கள் உடனடியாக வந்து அகற்றுவது இல்லை. மேலும், கழிவுநீரை டேங்கர் லாரிகளில் எடுக்க ஒரு செப்டிக் டேங்கிற்கு ரூ.2200வரை பணம் வாங்கின்றனர். நகராட்சி நிர்வாகம் ஒரு செப்டிக் டேங்கிற்கு ரூ.1200வரை தான் பணம் வசூலிக்க வேண்டும் என விதிமுறை வகுத்துள்ளது. ஆனால் தனியார் ஒப்பந்ததார்கள் இரு மடங்கிற்கு மேல் வசூலிக்கின்றனர்.  கழிவுநீரை அகற்ற அதிகமாக வசூலிக்கும் ஒப்பந்ததார் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பதிவேட்டில் கரும்புள்ளி
வீடுகளில் உள்ள தொட்டியில் இருந்து கழிவுநீர் அகற்ற நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக குடியிருப்புவாசிகளிடம் தனியார் ஒப்பந்ததாரர் வசூலிக்க கூடாது. இதனை மீறி அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஒப்பந்ததாரர் மீது பொதுமக்கள் புகார் செய்தால் ஒப்பந்தம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகாருக்கு ஆளான தனியார் ஒப்பந்த நிறுவனம்  மீண்டும் டெண்டரில் பங்கேற்காத படி நகராட்சி பதிவேட்டில் கரும்புள்ளி வைக்கப்படும் என நகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்