SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுவன் இறந்த வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

9/11/2018 12:29:23 AM

திருவள்ளூர், செப். 11:  திருவள்ளூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள காக்களூரில் வசித்து வருபவர் குப்புராஜ். இவரது மகன் தனுஷ்(6). அதே பகுதியை சேர்ந்தவர் சுதாகர் மகன் கவுதம்(6). இவர்கள் இருவரும், கடந்த 06.06.2010 அன்று வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ், சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மீது மோதியது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தனுஷ்(6), கவுதம்(6) ஆகியோர் மீது மின்கம்பம் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே தனுஷ் இறந்தார். படுகாயங்களுடன் கவுதம் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.இதையடுத்து இறந்த தனுஷின் தாய் அமுதா, காயமடைந்தகவுதமின் தந்தை சுதாகர் ஆகியோர், நஷ்டஈடு கேட்டு திருவள்ளூர் சிறப்பு மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 539 இழப்பீடு வழங்க, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 18.08.2015 அன்று உத்தரவிட்டார். ஆனாலும், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் அலைக்கழித்தது. எனவே, கோர்ட் உத்தரவை நிறைவேற்றக்கோரி, அதே நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எம்.கே.சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, இழப்பீடு தொகையை வழங்க தவறினால், அதற்கு இணையான மதிப்புள்ள அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அப்போதும், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீடு வழங்காததால், சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற தடம் எண்:201 அரசு பஸ்சை, கோர்ட் ஊழியர்கள் நேற்று மாலை ஜப்தி செய்து, கோர்ட்டில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kedarnath

  கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

 • JadeMineMyanmar

  மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

 • protestsdan

  மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

 • sachinbday

  46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

 • fingersgirl

  அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்