SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஏரியில் மூழ்கிய 2 சிறுவர்கள் சடலமாக மீட்பு

9/11/2018 12:29:16 AM

சென்னை, செப். 11: பெரும்புதூர் ஏரியில் மூழ்கி மாயமான 2 சிறுவர்களை, பேரிடர் மீட்பு படையினர், சடலமாக மீட்டனர். பெரும்புதூர் அருகே மாம்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். விவசாயி. இவரது மகன் மோகேஷ் (16). பெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். இதே பள்ளியில் அகரம் கிராமத்தை சேர்ந்த ஜெகத்செல்வன் (16) என்ற மாணவனும் படித்து வந்தான். இந்நிலையில், சிறுவர்கள் 2 பேர், பெரும்புதூர் அடுத்த நெமிலி கிராமத்தில் நேற்றுமுன்தினம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினர். பின்னர் காரந்தாங்கல் ஏரியில் குளிக்க சென்றனர். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர்கள் கரைக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள், இதுகுறித்து 2 மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பெற்றோரும், பெரும்புதூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை தேடினர். ஆனால், கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து பெரும்புதூர், இருங்காட்டுகோட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து மீட்பு படையினர்வந்து ஏரியில் தேடினர். ஆனால் மாணவர்கள் கிடைக்கவில்லை. இந்தநிலையில், நேற்று மதியம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ஏரியில் மூழ்கி மாயமான  சிறுவர்கள் 2 பேரையும் சடலமாக மீட்டனர். பின்னர் போலீசார், சடலங்களை கைப்பற்றி பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்