SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

புழல் சிறையில் பரபரப்பு காவலரை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த கைதி

9/11/2018 12:27:54 AM

சென்னை: புழல் சிறையில் காவலருக்கு கைதி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சேலத்தை சேர்ந்த ரசூலுதீன் (33), கடந்த 4.5.2017 முதல் போதைப் பொருள் வழக்குகளில் கைதாகி புழல் சிறையில் உள்ளான். விசாரணை சிறை பிரிவின் 4வது உயர் பாதுகாப்பு தொகுதியில் நேற்று முன்தினம் மாலை காவலர் லிவிங்ஸ்டன் பிரபு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, 5ம் உயர் பாதுகாப்பு பிரிவில் இருந்த கைதி ரசூலுதீன் 4ம் தொகுதிக்கு வேகமாக வந்தார். இதை பார்த்த காவலர் பிரபு ரசூலிதீனை நிறுத்தி, நீ எதற்கு அங்கு போகிறீயா? என கேள்வி எழுப்பி உள்ளார். இதில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திடீரென ஆத்திரமடைந்த கைதி ரசூலுதீன், காவலர் பிரபுவை தகாதவார்த்தைகளால் திட்டியதுடன், அவரை கைகளால் தாக்கி சீருடையை சரமாரியாக கிழித்துள்ளார். மேலும், பிரபுவுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசூலுதீனிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

* மாதவரம் அருகே மஞ்சம்பாக்கத்தை சேர்ந்த குருவப்பா (60)  என்பவரை சொத்துக்காக இவரது மகன்களான  ஆறுமுகம், பாலமுருகன் ஆகியோர் கடந்த 30.10.2013 ம் ஆண்டு கூலிப்படையை வைத்து கொலை செய்தனர். இந்த வழக்கில் இருமகன்கள் மற்றும் கூலிப்படையையாக செயல்பட்ட  கண்ணன், கலைவாணன், அசோக், சுதாகர், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர். இந்த வழக்கில்  ஜாமீனில் வெளி வந்த  7 பேரில் அசோக் என்பவர் கடந்த  2017 ம் ஆண்டு  ஜூலை மாதம் முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார். அவரை மாதவரம் பால்பண்ணை ஆய்வாளர் கண்ணன் தலைமையில் போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.
* வியாசர்பாடி நேதாஜி சாலையை சேர்ந்தவர் சுரேஷ் (32). இவருடைய நண்பர் நித்யா (30). இருவரும் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ரமணாநகரி–்ல் உள்ள மதுபான கடையில் குடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கும்பலுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதில் 5 பேரும் சுரேஷ், நித்யாவை சரமாரியாக தாக்கி விட்டு ஓடிவிட்டனர். புகாரின்பேரில், ரமணாநகர் பகுதியில் பதுங்கி இருந்த கிஷோர் குமார் (23) லட்சுமி நாராயணன் (21) சுரேஷ்குமார் (23) மதன் (24) கிரி (24) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
* வீட்டின் வாடகை பாக்கியை தராததால் சிந்தாதிரிப்பேட்டை ரெக்ஸ் சாலையை சேர்ந்த கற்பகம் (40) என்பவரை சுத்தியலால் தாக்கிய அதே பகுதியை சேர்ந்த மோசஸ் ஷெராக் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* மாமூல் தரமறுத்ததால் வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இறைச்சி கடையை நடத்தி வரும் செபத்திராஜ் (50) என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரனின் தம்பி முருகன் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* மயிலாப்பூர் நாச்சியப்பன் தெருவை சேர்ந்த கியான்சந்த்(30) என்பவரை தாக்கி அவரிடம் இருந்து 3 சவரன் செயின் மற்றும் ₹39 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு மாயமாகிவிட்டனர்.
* மாங்காடு அடுத்த கோவூர் அம்பாள் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (26). இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கலைவாணி (23) என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்த கலைவாணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* வண்டலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் புல்லட் திருட்டில் ஈடுபட்டு வந்தவண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த பழனிதங்கம் (22), தைலாவரம் எட்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த விஜயகுமார் (30), திருச்சி ஜீவா நகர் எல்லை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தினேஷ்குமார் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 புல்லட்டுகள் உள்பட 26 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
 • thailandbirdsing

  தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

 • presimodhi_madhya123

  மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

 • bandh_inwest123

  மேற்கு வங்காளத்தில் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் ரயில் மறியல் !

 • israel_newfasttrain

  இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

 • virataward_1234

  விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்