SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

புகாரை சரியாக விசாரிக்காத உதவி ஆய்வாளர்களுக்கு 50 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

9/11/2018 12:26:45 AM

சென்னை: இடப்பிரச்னை விவகாரத்தில் புகாரை சரியாக விசாரிக்காத உதவி ஆய்வாளர்களுக்கு தலா 25  ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் அபிராமி. இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இடப்பிரச்னை தொடர்பான விவகாரத்தில் கடந்த 2011ம் ஆண்டு என்னிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய பிரசாத் என்பவர்  மீது நடவடிக்கை எடுக்கும்படி பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன்பிறகு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனாலும், பிரசாத்தை காப்பாற்றும் முயற்சியில் பட்டினம்பாக்கம்  உதவி ஆய்வாளர்களாக இருந்த கஸ்தூரி, சிவலிங்கம் ஆகியோர் ஈடுபட்டனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புகாரை முறையாக விசாரிக்காமல் உதவி ஆய்வாளர்கள் கஸ்தூரி, சிவலிங்கம் ஆகியோர் கடமையில் இருந்து தவறி உள்ளனர்.

இது மனித உரிமை மீறல் ஆகும். இதனால் அவர்கள் இருவருக்கும் சேர்த்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் வழங்கி விட்டு உதவி ஆய்வாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

  • keralanunprotest

    பிஷப் பிராங்கோவை கைது செய்யாததை கண்டித்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போராட்டம்

  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்