SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆவணி திருவிழா 14ம் தேதி கொடியேற்றம்

9/11/2018 12:19:23 AM

சுசீந்திரம், செப்.11: சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் அமைந்துள்ள திருவேங்கட விண்ணவர பெருமாள் சுவாமிக்கு வருடம்தோறும் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆவணி திருவிழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்குகிறது. காலை 7.30 மணியளவில் கொடி பட்டத்துக்கு பூஜை, கொடி மரத்துக்கு பூஜை செய்யப்பட்டு 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

அதைத் தொடர்ந்து 10 நாட்களும் காலை, மாலை வேளைகளில் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, திருவேங்கட விண்ணவர பெருமாள், தேவி, பூதேவி சுவாமிகளை அலங்கரித்து ரத வீதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் விழாவான 22ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்திரன் தேரான சப்பர தேரில் பெருமாள், தேவி, பூ தேவி சுவாமிகளை அலங்கரித்து வைத்து பக்தர்கள் வடம் பிடித்து ரத வீதி சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.அன்று வருடத்தில் முதல் சனிபிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடக்கிறது. 10ம் திருவிழாவான 23ம் தேதி மாலை பெருமாள், தேவி, பூதேவி சுவாமி திருஆறாட்டு நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்