SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் சிவசேனா சார்பில் 100 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைப்பு

9/11/2018 12:19:16 AM

குமாரபுரம், செப்.11: குமரி மாவட்டத்தில் சிவசேனா சார்பில் 100 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுகின்றன. இலுப்பகோணத்தில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை அனுப்பும் பணியை தலைவர் ஏ.பி. ராஜன் தொடங்கி வைத்தார். பூஜைக்கு வைக்கப்படும் சிலைகள் அனைத்தும் வரும் 14ம் தேதி பல ஊர்களில் இருந்தும் நாகர்கோவில் நாகராஜா ேகாயில் திடலுக்கு எடுத்து வரப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து மாலை 2.30 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு கன்னியாகுமரி கடலில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. ஊர்வலத்தை தொழிலதிபர் அழகி விஜி துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சிக்கு சிவசேனா மாவட்ட தலைவர் ஏ.பி.ராஜன் தலைமை வகிக்கிறார். மாவட்ட இளைஞரணி தலைவர் அஜித்குமார், நிர்வாகிகள் ராஜன், ஜெயமனோகர், ஜெயராஜ், குமாரன் தம்பி, ஜெகதேவ், அர்ஜுனன், சந்திரகுமார், சந்திரன், மணி, ஹரிபிரசாத், ஜோதி, சந்திரசேகர், சுபாஷ், கண்ணன், குமார், மணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-01-2019

    17-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்