SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களை இடமாற்றம் செய்ய முடிவு

9/11/2018 12:19:09 AM

நாகர்கோவில், செப்.11: குமரியில் டாஸ்மாக்கடை ஊழியர்களை இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. குமரியில் ஏற்கனவே 146 டாஸ்மாக் கடைகள் இருந்தன. தற்போது, 97 கடைகள் உள்ளன. தற்போது டாஸ்மாக் கடைகளில் சம்பளம் குறைவு என்றாலும், குவாட்டருக்கு குறைந்த பட்சம் 5 முதல், பீருக்கு ரூ.10 வரை வாங்குவதால், ஒரு கடைக்கு தினசரி ரூ.5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை யாரும் கண்டு கொள்வது இல்லை. இதனால் அனைத்து கடைகளிலும் கூடுதல் விலைக்கே மது விற்பனை செய்கின்றனர். இதுதவிர மதுபான நிறுவனங்களும் தங்களது பிரான்டை அதிகம் விற்பனை செய்ய, டாஸ்மாக் அதிகாரிகள் மட்டுமின்றி ஊழியர்களையும், தங்களது விற்பனை பிரதிநிதிகள் மூலம் மாதம்தோறும் கவனித்து விடுகின்றன.

இந்நிலையில், தற்போது டாஸ்மாக் அதிகாரிகள் மது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், மதுக்கடைகளை விற்பனை அடிப்படையில், ஏ,பி,சி என 3 ஆக தரம் பிரித்துள்ளனர். இதன்படி, ஏ பிரிவு கடை ஊழியர்கள், சி பிரிவிற்கும், சி பிரிவு ஊழியர்கள், பி பிரிவிற்கும், பி பிரிவு ஊழியர்கள் ஏ பிரிவிற்கும் இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டு, டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டத்தில், கருத்தும் கேட்டு பெறப்பட்டது. இதற்கு சி மற்றும் பி பிரிவு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்தாலும், ஏ பிரிவு கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே ஏ பிரிவு ஊழியர்களிடம், சில அதிகாரிகள் இடமாற்றத்தை ரத்து செய்கிறோம் எனக்கூறி “வழக்கம்போல்” பணப் பேரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்