SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜேம்ஸ் இன்ஜி.கல்லூரி பட்டமளிப்பு விழா மாணவர்கள் வெற்றி பெறும்வரை நம்பிக்கை, முயற்சியை கைவிடக்கூடாது பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் அறிவுரை

9/11/2018 12:18:54 AM

குளச்சல், செப்.11:  நாகர்கோவில் அருகே நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியில் 7 வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் ஜேம்ஸ் பிரேம்குமார் தலைமையில் நடந்தது. பேராசிரியர் ஜெய பாலாஜி வரவேற்று பேசினார். ரெபாக்கா ஜேம்ஸ் பிரேம்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.  தமிழக ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,மாணவர்கள் கலந்துரையாடும்போது எதிர்க்கால வாழ்க்கைக்கு உயர் கல்வி குறித்து கருத்துக்களை பரிமாற வேண்டும். இப்படித்தான் எனக்கு ஐ.ஏ.எஸ்.படிக்க ஆசை வந்தது. முதலில் எனக்கு வழிகாட்டி இல்லை. பின்னர் எனது ஆசிரியர்தான் வழி காட்டினார்.

நாம் வாழ்க்கையில் முன்னேற நல்ல வழிகாட்டி தேவை. அதுபோல் உங்கள் முன்னேற்றத்திற்கு உங்கள் வழிகாட்டியை கண்டுபிடியுங்கள். உங்கள் திறமை எதில் இருக்கிறதோ அதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் திறமையை வெளியே கொண்டு வர நல்ல நண்பன் தேவை. படிப்புடன் நல்ல விஷயங்களையும் கற்று கொள்ள வேண்டும். நல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பளம் வாங்குவதுடன் நின்று விடாமல் சமூக அக்கறையுடன் வாழ வேண்டும். இப்போது நீங்கள் பொறியாளர்  தகுதியை  பெற்றுள்ளீர்கள். திறமைக்கு வேலை கிடைக்க வேண்டும். ஒரே முயற்சியில் வெற்றி கிடைக்காது. வெற்றி பெறும்வரை நம்பிக்கை, முயற்சியை கைவிட கூடாது. வேலை கிடைக்கும்வரை திறமையை வளர்த்து கொண்டேயிருங்கள். வாழ்க்கையில் எந்த நிலையை அடைந்தாலும் உங்கள் பெற்றோரை கடைசிவரை உங்களுடனே வைத்து கொள்ளுங்கள். எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்