SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பார்வதிபுரத்தில் ரயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

9/11/2018 12:18:45 AM

நாகர்கோவில், செப். 11: நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் மார்த்தாண்டன்(40). ஆட்ேடா டிரைவர். இவருக்கு லதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக லதா, கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மார்த்தாண்டன் வீட்டின் அருகே குடியிருந்து வந்த பெற்றோர் வீட்டில் சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மார்த்தாண்டன் நேற்று காலை தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு பார்வதிபுரத்திற்கு சென்றுள்ளார். பின்னர் பார்வதிபுரம் ரயில் தண்டவாளம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து மும்ைப சென்ற ஜெயந்தி ஜனதா ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்இன்ஸ்பெக்டர் பிரியாமோகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்