SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகர்கோவிலில் 18ம்தேதி மாதாந்திர விளையாட்டு போட்டி

9/11/2018 12:18:20 AM

நாகர்கோவில், செப்.11 :  கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், குமரி மாவட்ட பிரிவு நடத்தும் ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 18ம் தேதி அன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து மற்றும் வாலிபால் ஆகிய விளையாட்டுகள் நடைபெறவுள்ளது. குழு விளையாட்டுப் போட்டிகள் கூடைப்பந்து (ஆண்கள் மட்டும்) வாலிபால் (பெண்கள் மட்டும்), தடகளம் (ஆண்கள் மற்றும் பெண்கள்), 200 மீ, 400மீ, 800 மீ (பெண்கள்), 3000 மீ (ஆண்கள்), நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முனை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல்,  நீச்சல் போட்டிகள் 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ (பிரீ ஸ்டைல்), 50 மீ (பேக் ஸ்டோர்க்), 50 மீ (பிரஸ்ட் ஸ்டோர்க்), 50 மீ (பட்டர்பிளை) மற்றும் 200 மீ (தனி நபர் மெட்லே) உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது.ஒரு போட்டியாளர் ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் போட்டி நடைபெறும் அன்று காலை 8.30 மணிக்குள் விளையாட்டரங்கத்திற்கு வந்து பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்