SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் வேலை நிறுத்தப்போராட்டம் 10 அரசு பஸ்கள் கல்வீசி உடைப்பு

9/11/2018 12:16:46 AM

நாகர்கோவில், செப். 11: குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி மேற்கு மாவட்ட பகுதியில் 10 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அருமனையில் இருந்து குலசேகரம் வழியாக நாகர்கோவில் செல்லும் தடம் எண்318 என்ற பஸ் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் குலசேகரத்தை அடுத்த ஈஞ்சக்கோடு, மன்னாரங்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தது. இதுகுறித்து குலசேகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே போல் கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளைக்கு சென்ற அரசு பஸ்சை பாலவிளையை சேர்ந்த ஜெஸ்டின் ஷாஜி என்பவர் ஓட்டி சென்றார். பள்ளியாடி அருகே உள்ள பழையகடை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 2 பேர் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்து சேதமானது.

 உண்ணாமலைக்கடையை சேர்ந்த அஜித் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தடம் எண் 451 அரசு பஸ்சை ஓட்டி வந்தார். அழகியமண்டபத்தை கடந்து பரைக்கோடு அருகே வந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து சேதமானது. இது தொடர்பாக தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். திருச்செந்தூரில் இருந்து களியக்காவிளை நோக்கி நேற்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்து. பஸ்சை கருணாகரன் ஓட்டினார். பஸ் நேற்று காலை தக்கலையை அடுத்த காட்டாத்துறை பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.  அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மணல் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் திலீபன் அரசு பஸ் மீது கல்வீசிய காட்டாத்துறையை சேர்ந்த சசிகுமார்(35) என்பவரை கைது செய்தார். இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் வந்தது. தக்கலையை அடுத்த இரவிபுதூர்கடை பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுதொடர்பாக தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு பஸ் வந்தது. சிராயங்குழி பகுதியில் வந்த போது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தக்கலையில் இருந்து பெருஞ்சாணி செல்லும் அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு குமாரபுரம் அருகே வாறுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியது பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து டிரைவர் புகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர். தேங்காப்பட்டணத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. புதுக்கடை அருகே கைசூண்டி பகுதியில் வந்தபோது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

 தேங்காப்பட்டணத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த பஸ், முன்சிறை சந்திப்பு அருகே சென்றபோது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இதுகுறித்து புதுக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 இவை உள்பட குமரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • SriLankaHomage

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

 • selphiGorilla

  கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

 • QingdaoNavalParade

  சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்