SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரியில் கடைகள் அடைப்பு

9/11/2018 12:16:35 AM

நாகர்கோவில், செப். 11: குமரி மாவட்டத்தில்  வேலைநிறுத்தத்தையொட்டி தனியார் வாகனங்கள் இயக்கப்படாததாலும், கடைகள் அடைத்து இருந்ததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.  பெட்ரோல், டீசல்  விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில்  திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து போராட்டத்தை  நடத்தியது. நாகர்கோவில் நகர பகுதியில் கோட்டார், அண்ணா பஸ் நிலையம், வடசேரி, மீனாட்சிபுரம், கலெக்டர் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. டீக்கடை, மருந்துகடை, பழக்கடை, பேக்கரி கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. வடசேரியில் உள்ள கனகமூலம் சந்தையில் உள்ள காய்கறிகடைகளில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. ஒரு சில கடைகள் பூட்டப்பட்டு இருந்தன. இதுபோல் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. ஒரு சில கடைகள் பூட்டப்பட்டு இருந்தன.

 திங்கள்சந்தை, இரணியல் பகுதியில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. திங்கள் சந்தையில் உள்ள காய்கறி சந்தை வழக்கம்போல் திறக்கப்பட்டு இருந்தது. மார்த்தாண்டம், குலசேகரம், திருவட்டார், கருங்கல், புதுக்கடை அனைத்து பகுதியிலும் உள்ள பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டு இருந்தன. இதுபோல் மினிபஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் இயங்கின. குமரி மாவட்டத்தில் 12 பணிமனைகளில் இருந்து சுமார் 800 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் நேற்று காலை பஸ்கள் தாமதமாக பணிமனையில் இருந்து வெளியே புறப்பட்டது. இதனால் கடயாலுமூடு, உள்பட மலையோரம் செல்லும் தபால்கள் அனுப்பமுடியால் தேங்கியது.

 கேரள அரசு பஸ்கள் நேற்று குமரி மாவட்டத்திற்கு வரவில்லை. நேற்று சுபமூகூர்த்த தினம், ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் வாகனங்கள், மினிபஸ்கள் இயக்கப்படாததால் கிராமபுறங்களில் உள்ளவர்கள், விேஷச நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் இயக்கப்படும் பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் காலையில் திறக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மத்திய, மாநிலஅரசு அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் எஸ்பி நாத் தலைமையில் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்