SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம்

9/11/2018 12:16:27 AM

நாகர்கோவில், செப். 11: மருத்துவம் சார்ந்த படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிபார்ம், பிஓடி, பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோ தெரபி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பிஎஸ்சி கிரிடிகல் கேர் டெக்னாலஜி, பிஎஸ்சி டயாலிசிஸ் டெக்னாலஜி, பிஎஸ்சி ஆப்பரேசன் தியேட்டர் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, பிஎஸ்சி பிஸிசியன் அசிஸ்டண்ட் டெக்னாலஜி, பிஎஸ்சி ரெஸ்பிரேட்டர் தெரபி, பிஎஸ்சி ஆக்சிடென்ட் மற்றும் எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, பிஎஸ்சி மெடிக்கல்  லேபரட்டரி டெக்னாலஜி ஆகிய  படிப்புகளுக்கான விண்ணப்ப படிவம் விநியோகம் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் தொடங்கியது.

 ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் பிஎஸ்சி மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி டயாலிசிஸ் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகள் இந்த வருடம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 14 பாடப்பிரிவுக்கான விண்ணப்பபடிவம் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் லியோடேவிட், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவர்கள் ரெஜிமோள், கலைக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 ஆசாரிபள்ளத்துக்கு மொத்தம் 1500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பபடிவம் கட்டணமாக ரூ.400 டிடியாக செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். எஸ்சி எஸ்டி பிரிவினர் ஜாதி சான்றிதழ் கொடுத்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் விநியோகம் 19ம் தேதி வரை நடக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 20ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கவுன்சலிங் அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்படுகின்றன. நேற்று மாலை வரை மொத்தம் 377 விண்ணப்பங்கள் விற்றுள்ளது. இதில் எஸ்சி, எஸ்சியினர் 27 விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர்வெறிச்சொடிய கன்னியாகுமரி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்