SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 ஆயிரம் புகார்கள் விசாரணையில் உள்ளது மாநில மகளிர் ஆணைய தலைவர் தகவல் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக

9/11/2018 12:13:05 AM

திருவண்ணாமலை, செப்.11: பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக 3 ஆயிரம் புகார்கள் விசாரணையில் உள்ளது என தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.தமிழ்நாடு மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம், மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்து, பெண்களுக்கான சட்டங்கள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது.கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் உமா மகேஸ்வரி, டிஎஸ்பி பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா டார்த்தி வரவேற்றார்.தொடர்ந்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வரும் புகார்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், எஸ்பி, நீதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், பெண்களுக்கு எதிராக நடந்த 3 ஆயிரம் புகார்கள் மகளிர் ஆணையத்தில் விசாரணையில் உள்ளன. கடந்த 6 மாதத்தில் மட்டும் 813 புகார்கள் பெறப்பட்டுள்ளன. குடும்ப வன்முறைகள் தொடர்பாகவே அதிகமான புகார்கள் வருகின்றன.

தேசிய அளவில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாகவே உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, போலீசாரின் நடவடிக்கை ஆணையத்துக்கு திருப்தியாகவே இருக்கிறது.சென்னையில் மட்டும் 35 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. அங்கு வரும் புகார்கள் தொடர்பாக கவுன்சலிங் அளிக்க சமீபத்தில் ஆயிரம் விளக்கு பகுதியில் மையம் திறக்கப்பட்டது. மகளிர் காவல் நிலையங்களில் புகார்கள் மீது, முடிந்தவரை சிஎஸ்ஆர் நிலையிலேயே குடும்ப பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ள வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.திருவண்ணாமலை வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரி மாணவி அளித்துள்ள பாலியல் தொல்லை தொடர்பான புகார் மகளிர் ஆணையத்துக்கு வரவில்லை. இதுதொடர்பான புகார் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

  • BombBlastLanka19

    இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்

  • 22-04-2019

    22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்