SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பாலியல் புகாரில் சிக்கிய கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் விடுவிப்பு பெற்றோர்கள் எதிர்ப்பால் கலெக்டர் நடவடிக்கை திருவண்ணாமலைக்கு பணியிட மாற்றம் ெபற்று வந்தவர்

9/11/2018 12:12:54 AM

திருவண்ணாமலை, செப்.11: பாலியல் புகாரில் சிக்கி திருவண்ணாமலைக்கு பணியிட மாற்றம் பெற்று வந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் குமார் தாக்கூரை விடுவித்து, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதல்வராக பணிபுரிந்த குமார் தாக்கூர், கடந்த ஜனவரி மாதம், அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தெரிவித்த தகவலின்பேரில், குழந்தைகள் நல அமைப்பு ஒன்று முதல்வர் குமார் தாக்கூர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளித்தார்.இந்நிலையில் பள்ளி முதல்வர் குமார் தாக்கூர், பெங்களூருவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருவண்ணாமலை அடுத்த கணத்தம்பூண்டியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணியில் சேர்ந்தார்.

பாலியல் குற்றம் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ள நபரை, மீண்டும் வேறொரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்தது தவறு, உடனடியாக பள்ளியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு குழந்தைகள் நல ஆணையத்திடம் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஆன்ட்டிரூ ஜேசுராஜ் என்பவர் மனு அளித்துள்ளார்.இந்நிலையில், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகி சங்கர் மற்றும் பெற்றோர்கள் நேற்று மாலை பள்ளிக்கு வந்தனர். பாலியல் புகாரில் சிக்கிய ஒருவர், மீண்டும் பள்ளியில் பணிபுரிவதால் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் குமார் தாக்கூரை நேரில் சந்தித்து, தங்களுடைய அச்சத்தை தெரிவித்ததோடு, இப்பள்ளியில் இருந்து மாறுதல் பெற்று செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தன் மீதான குற்றச்சாட்டு உண்மையில்லை என அப்போது குமார் தாக்கூர் மறுத்துள்ளார். இதனால் சர்ச்சைக்குரிய முதல்வரை பணியிட மாற்றம் செய்யும் வரை, பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் புறக்கணிக்கவும் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், தகவலறிந்த திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு விசாரித்தார். மேலும், பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் குமார் தாக்கூரை, திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவித்து நேற்று மாலை உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகல் உடனடியாக, குமார் தாக்கூரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இது குறித்த தகவல் உடனடியாக பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்