SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

போர்வெல் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி

9/11/2018 12:12:45 AM

திருவண்ணாமலை, செப்.11: மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட போர்வெல் உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்ட போர்வெல் உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று, தங்களது 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. இதனால் திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 50 போர்வெல் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போர்வெல் உரிமையாளர்கள் கூறுகையில், `மத்திய அரசு டீசல் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால் எங்களுக்கு சிரமமாக உள்ளது. மத்திய அரசு டீசல் விலையை குறைக்கக்கோரி 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இன்று (நேற்று) நடைபெற்ற பந்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. மத்திய அரசு டீசல் விலையை குறைக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறோம்' என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்