SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனாம்காரியந்தல் கிராமத்தில் பள்ளி அருகே இயங்கும் ஜல்லி உடைப்பு ஆலையை அகற்ற நடவடிக்கை குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மாணவர்கள் மனு

9/11/2018 12:12:37 AM

திருவண்ணாமலை, செப்.11: இனாம்காரியந்தல் கிராமத்தில் பள்ளி அருகே இயங்கிவரும் ஜல்லி உடைப்பு ஆலையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ ரத்தினசாமி, மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மகளிர் சுயஉதவி குழு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்ைக குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்கு சென்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தி, உதவி உபகரணங்கள் கேட்டு மனு அளித்தவர்களுக்கு உடனடியாக வழங்க அதிகாரிக்கு உத்தரவிட்டார்.இந்நிலையில், ஜம்னாமரத்தூர் தாலுகா கல்லாத்தூர், கல்லத்தூர், பட்டறைக்காடு உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற எஸ்டி சாதி சான்று வழங்கக்கோரி மனு அளித்தனர். சாதி சான்று வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.இதேபோல், இனாம்காரியந்தல் கிராமம் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் கலெக்டரை சந்தித்து, தங்கள் பள்ளிக்கு அருகாமையில் செயல்படும் ஜல்லி உடைப்பு ஆலையால் அவதிக்குள்ளாகி வருவதாகவும், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள், தீக்குளிப்பு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதை தடுக்க கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மனு அளிக்க வந்த பொதுமக்களை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • china_lamfesti1

  சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

 • pakisthan_saudi1

  பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

 • pulwama_kashmirthakuthal11

  காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்