SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓய்வு போலீசாரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை சங்கத்தினர் வலியுறுத்தல்

9/9/2018 1:09:21 AM

மன்னார்குடி, செப்.9: ஓய்வு பெற்ற போலீசாரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை  வழங்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அமல்படுத்த வேண்டும் என ஓய்வு காவலர்கள் நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மன்னார்குடியில் ஓய்வு பெற்ற காவலர்கள் நலசங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்ட தலைவர் நடராஜன் வரவேற்றார். கூட்டத்தில் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பணியில் இருக்கும்போது மரணமடையும் காவலர்களின்  வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க  வேண்டும். இவற்றை  தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்து அமல்படுத்த வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் ஓய்வு பெற்ற காவலர்களுக்கும்  மருத்துவ காப்பீடு திட்டத்தில்  எல்லாவித நோய்களுக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 வயது நிரம்பிய  ஓய்வு பெற்ற காவலர்களுக்கு தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் கிளை செயலாளர் குமாரசாமி நன்றி கூறினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்