SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளியில் வானவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

9/9/2018 1:09:14 AM

மன்னார்குடி,செப்.9: மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் வானவியல் பற்றிய மேற்படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் வானவியல் தொலைநோக்கி கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்திய வானவியல் கழகத்தின் வான் இயற்பியல் துறையின் ஓய்வு பெற்ற தொழிற்நுட்ப நிபுணர் புகழேந்தி, ஆல்பா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் பிரவீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். ஓய்வு தலைமையாசிரியர் சேதுராமன் முன்னிலை வகித்தார். முதுகலை இயற்பியல் ஆசிரியர் அன்பரசு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

 ஒரு அங்குல, 2 மற்றும் 6 அங்குல தொலைநோக்கிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சூரியனின் மேற்பரப்பு புகைப்படங்கள், சூரிய புள்ளிகள் விளக்கம், சூரிய குடும்பம், கோள்களின் சுழற்சி, எரிட்டோ தினஸ், கலிலியோ மற்றும் கோபர் நிகஸ் ஆகியோரின் கண்டுபிடிப்புகள், நட்சத்திரங்களின் பிறப்பு, இறப்பு குறித்த விளக்கம் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அண்டம் தோற்ற கொள்கை, வின் கற்களின் மோதல், வால் நட்சத்திரம் போன்றவை குறித்த குறும்படங்கள் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.   நிகழ்ச்சியில் வானவியல் குறித்த பட்டம், பட்ட மேற்படிப்புகள், பட்டய படிப்புகள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள்  தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. கருத்தரங்கில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Deebam7thDay

    திருவண்ணாமலை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளில் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி

  • 21-11-2018

    21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்