SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கனரக சரக்கு வாகனங்களுக்கு பதிவு அச்சு எடை உயர்வு கலெக்டர் தகவல்

9/9/2018 12:11:01 AM

கரூர், செப். 9: கனரக சரக்கு வாகனங்களுக்கு பதிவு அச்சு எடை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் அறிவிப்பின்படி, கனரக சரக்கு வாகனங்களுக்கு பதிவு அச்சு எடை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த தேசிய அனுமதி மற்றும் தமிழ்நாடு அனுமதி பெற்ற கனரக சரக்கு வாகன உரிமையாளர்கள் தமது வாகன பதிவுச் சான்று, அனுமதிசீட்டு ஆகியவற்றை கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து, உயர்த்தப்பட்ட அச்சு எடையினை மேற்குறிப்பு செய்து பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உரிமையாளர்கள் மேற்கண்ட அசல் ஆவணங்களுடன் நடப்பில் உள்ள காப்புச்சான்று, புகைச்சான்று, நடப்பு வரி ரசீது ஆகியவற்றை இணைத்து பதிவுச் சான்றில் கட்டணம் ரூ.525 மற்றும் அனுமதிசீட்டில் மேற்குறிப்பு கட்டணம் ரூ.550 என மொத்தம் ரூ.1075, அத்துடன் வித்தியாச வரியினையும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்