SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஜிட்டல் இந்தியாவுக்காக அனைத்து கிராமங்களையும் இணைக்க செயற்கைகோள்கள் தயாரிக்க வேண்டும் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்

9/9/2018 12:10:54 AM

கரூர், செப். 9:  டிஜிட்டல் இந்தியாவுக்காக அனைத்து கிராமங்களையும் இணைக்க செயற்கை கோள்கள் தயாரிக்க வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:இந்திய வின்வெளித்துறையில் ஏற்கனவே 45 செயற்கை கோள்கள் உள்ளன. இயற்கை பேரிடர், செய்தி தொடர்புத்துறை, நேவிகேஷன், இயற்கை வளங்கள் போன்றவற்றை ஆய்வு செய்ய செயற்கை கோள்கள் உள்ளன. டிஜிட்டல் இந்தியாவுக்காக அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் செயற்கை கோள்கள் தயாரிக்க வேண்டும்.  ஆண்டுக்கு 15 செயற்கை கோள்கள் தேவைப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இஸ்ரோ மாதம் ஒரு செயற்கை கோள் அனுப்பியுள்ளது.சந்திராயன் 1 நிலவின் சுற்றுவட்டப்பாதை ஆராய்ச்சிக்கானது. சந்திராயன் 2 நிலவுக்குள் சென்று ஆராய்வது.

சூரியனின் நிகழ்வுகளை பூமியில் இருந்து ஆய்வு மேற்கொள்வதோடு, வெளியில் இருந்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.உலகளவில் விண்வெளித்துறையில் இந்தியா 5வது இடத்தில் இருந்தாலும், இஸ்ரோவுக்கு ஒவ்வொரு ராக்கெட் அனுப்புவதும், அனுப்பியதும் சவாலான ஒன்றுதான். சிறிய அளவிலான செயற்கை கோல்களை தயார் செய்தால் அதிகளவு செயற்கை கோள்களை ராக்கெட் மூலம் அனுப்பலாம். செயற்கை கோள்கள் மூலம் நாட்டுக்கு தேவையான மீனவர்கள் பிரச்னை, மலைப்பிரதேசங்களில் வெள்ளம், காடுகளில் தீ போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்