SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் பீதி சாலையின் நடுவே மிரட்டும் பள்ளங்கள் உடனே சரி செய்யப்படுமா?

9/7/2018 5:30:56 AM

சிவகங்கை, செப்.7: சிவகங்கை நகரில் பல்வேறு சாலைகளில் நடுவில் காணப்படும் பெரிய அளவிலான பள்ளங்களால் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. சிவகங்கை நகரில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு பஸ் ஸ்டாண்ட் எதிர்ப்புறம் பாண்டிகோவில் மெயின் தெருவில் சாலையின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. சாலையையொட்டி கழிவுநீர் செல்லும் சுமார் 8 அடி உயர பள்ளம் உள்ளதால் தொடர் விபத்து நடந்து வருகிறது. 8வது வார்டு திருவள்ளுவர் தெரு, முந்தைய வேலைவாய்ப்பு அலுவலக சாலையில் சிறிய பாலம் உடைந்து பாதி சாலையிலேயே போக்குவரத்து நடந்து வருகிறது. 22வது வார்டு ஜெய்ஹிந்த் தெருவில் பாலம் உடைந்து கம்பிகள் சாலையில் நீட்டிய நிலையில் உள்ளன.

குழந்தை வேலாயுதசாமி கோவில் தெரு, பஸ் ஸ்டாண்ட் பின்புறம், உழவர் சந்தை அருகில் என பல்வேறு இடங்களில் இதுபோல் சிறிய பாலங்கள் உடைந்து பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை சரி செய்யாமல் அப்படியே போட்டுள்ளதால் மேலும், மேலும் குழாய்கள் உடைந்தும், மேற்புறம் உள்ள கான்கிரீட் உடைந்தும் சிறிய அளவிலான சாலைகளாக மாறியுள்ளன. இந்த சாலைகளில் அடிக்கடி விபத்து நடந்து வருகின்றன. பிரதான சாலைகளில் உள்ள இந்த பள்ளங்களால் வாகனம் ஓட்டி வருபவர்கள் நிலை குலைந்து போகின்றனர். மழை பெய்யும் நேரங்களில் சாலைகளின் நடுவே உள்ள பள்ளங்கள் தெரியாத நிலையில் உள்ளதால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், ‘‘நகரில் உள்ள பிரதான சாலைகள் கூட பராமரிப்பில்லாமல் உள்ளன. கால்வாய்களில் கழிவு நீர் செல்ல அமைக்கப்பட்ட குழாய்கள் மற்றும் கான்கிரீட்டால் போடப்பட்ட சிறிய பாலம் தரமற்ற நிலையில் உள்ளதால் விரைவில் உடைந்து வருகின்றன. சாலைகளின் நடுவே உள்ள பள்ளத்தால் விபத்து கள் நடந்து வரும் நிலையிலும் அவற்றை சரி செய்வதில் மெத்தனம் காட்டப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் ஆட்கள் நடந்து சென்று உள்ளே விழுந்தால் கூட தெரியாது.
ஆண்டுக்கணக்கில் சாலைகள் கண்டுகொள்ளப்படாமல் பராமரிப்பின்றி உள்ளன. உடனடியாக இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்