SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விநாயகர் சிலைகளை பிளாஸ்டிக் பொருட்களில் தயாரிக்க கூடாது மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

9/7/2018 5:30:41 AM

சிவகங்கை, செப். 7: பிளாஸ்டிக் உள்ளிட்ட எளிதில் கரையாத பொருட்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஜெயகாந்தன் அறிவுறுத்தினார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்பி ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். தலைமை வகித்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது: விநாயகர் சிலை அமைத்து வழிபடும் இடத்திற்குறிய அனுமதியை முன் கூட்டியே பெற வேண்டும். போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையின் தடையின்மை சான்று பெற்று மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்படி சிலைகள் வடிவமைத்திட வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிக்காத அளவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் போன்ற எளிதில் கரையாத பொருட்களின் மூலம் சிலைகள் தயாரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனுமதி பெற்ற இடங்களின் மட்டுமே விநாயகர் சிலை வைத்து வழிபடுவதுடன் அனுமதி வழங்கிய பாதைகளில் சென்று விநாயகர் சிலையினை, ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் கரைக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, தேவகோட்டை சப் கலெக்டர் ஆஷாஅஜீத், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜேந்திரன், சிவகங்கை ஆர்டிஓ செல்வகுமாரி மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்