SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காய்ச்சல் பாதிப்பு தகவல் தராத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை துணை இயக்குநர் எச்சரிக்கை

9/7/2018 5:30:32 AM

காரைக்குடி, செப்.7: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிக்குன் குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து சுகாதாரத்துறை தடுப்பு முகாம் நடத்தி வருகிறது. முகாமில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் யசோதாமணி கூறுகையில், ‘‘மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சங்கராபுரம் ஊராட்சியில் மட்டும் இதுவரை 2 பேருக்கு சிக்குன்குனியா காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் மட்டும் 47 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

26 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இப்பகுதியில் கடந்த ஆண்டு 21 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. அதேபோல் காரைக்குடி நகராட்சியில் 4 பேருக்கு கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் இருந்தது. அங்கும் பாதிப்பு இல்லை. கடந்த 1 மாதமாக இப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் அவ்வாறு சொல்லாவிட்டால் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். பிடிஓ ஸ்ரீதர், டாக்டர் ஆனந்தராஜ், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ரமேஷ், இளநிலை வல்லுநர் இறையரசி, சுகாதார மேற்பார்வையாளர்கள் முருகேசன், சுரேஷ், ஊராட்சி உதவியாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்