SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளிக்கு தூய்மை விருது

9/7/2018 5:30:23 AM

காரைக்குடி, செப்.7: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி தமிழக அரசின் தூய்மை பள்ளி விருது பெற்றுள்ளது என பள்ளி தாளாளர் சத்யன் தெரிவித்தார். காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் சத்யன் கூறுகையில், ‘‘மாணவர்களுக்கு சிரமப்படுத்தாத கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் பள்ளி செயல்படுகிறது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் அடிப்படை கல்வி சிறந்ததாக அமைய வேண்டும் என்பதற்காக வகுப்பு துவங்கும் முன்பு யோகா, தியானம் ஆகியவையும் இதனை தொடர்ந்து இசை, செஸ் போன்ற பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

தவிர பள்ளி தூய்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு அதில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளிலேயே மிகச்சிறந்த தூய்மைப்பள்ளி என பாராட்டி தமிழக அரசு தூய்மை பள்ளி விருது மற்றும் ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை வழங்கி உள்ளது. பள்ளியின் வகுப்பறை தூய்மை, சுத்தமான குடிநீர் வசதி, விளையாட்டு திடல், பொழுதுபோக்கு மன்றம், வளாகம் முழுவதும் வண்ணப்பூ செடிகள் என பல்வேறு சிறப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்