SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சாலைக்கிராமத்தில் தண்ணீர் செல்லும் தடங்கள் அழிப்பு கழிவுநீரோடு தேங்கும் மழைநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்

9/7/2018 5:30:16 AM

இளையான்குடி, செப். 7: சாலைக்கிராமத்தில் தண்ணீர் செல்லும் தடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், சுகாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வாய்க்கால் ஆக்கிரமிப்புளை அகற்றக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இளையான்குடி தாலுகா சாலைக்கிராமத்தில். புதிய சாலை கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த சாலையின் குறுக்கே தண்ணீர் செல்வதற்காகவும், மழைநீர் வடியவும், ஏராளமான தூம்புகள், சிறு மடைகள் ஏற்கனவே இருந்தன. சாலையின் மேற்கு பகுதியிலிருந்து தண்ணீர் கிழக்கு நோக்கி செல்வதற்கு வசதியாக ஆர்.எஸ்.மங்கலம் விலக்கு முதல் மகாலிங்கம் கோயில் வரை சிறிய மற்றும் பெரிய உருளை தூம்புகள் இருந்தன. ஆனால் நெடுஞ்சாலைத்துறையினரின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த புதிய சாலையில், தற்போது இந்த தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டும், ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது.

மழைநீர் செல்ல வழித்தடங்களை சீரமைக்காமல் நெடுஞ்சாலைத்துறையினர் புதிய சாலை அமைத்து வருவதற்கு, அப்பகுதி மக்கள் அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருவழியாக சாலையை அவசர அவசரமாக அமைத்து முடித்தனர். ஆனால் மழைநீர் செல்வதற்கு வழியில்லாததால் சாலைக்கிராமம் பஸ்ஸ்டாணட் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தெருக்களில் கழிவுநீரோடு கலந்து தேங்குவதால் தொற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறையினர் கண்டுகொள்வதே இல்லை. அதனால் சாலைக்கிராமம் பகுதியில் மழைநீர் வழிந்தோடும் தடங்களை கண்டறிந்து, தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் தலையீட்டால் அதிகாரிகள் அலட்சியம்
சாலைக்கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு இதுவரை 7 முறை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால் நடவடிக்கை இல்லை. அரசியல் தலையீட்டால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. புது கலெக்டர், புது டிஆர்ஓ, புது தாசில்தார் நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுகுறித்து சிவக்குமார், காஜா கூறுகையில், ‘சாலைக்கிராமத்தில் மழைநீர் செல்லும் தடங்களில் ஆக்கிரமிப்புகள் ஏராளமாக உள்ளது. அதனால் மழைகாலத்தில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கும் நிலை உள்ளது. அதனால் பள்ளி, பஸ் ஸ்டாண்ட் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் பரவி வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தும் பயனில்லை. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்