SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் சம்பளம் வழங்குவதில் தொடர் இழுபறி ஆசிரியர்கள் புலம்பல்

9/7/2018 5:29:55 AM

சிவகங்கை, செப். 7: சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்கள் இருந்தன. புதிதாக திருப்பத்தூர் கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே இருந்த கல்வி மாவட்டத்தில் இருந்து ஐந்து யூனியன்கள் பிரிக்கப்பட்டு வேறு கல்வி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டன. இவ்வாறு காளையார்கோவில் யூனியன் சிவகங்கையில் இருந்து தேவகோட்டை கல்வி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஆசிரியர் பணி பதிவேடு உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் ஆன்லைன் வழி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என கருவூல ஆணையர் உத்தரவிட்டார். காளையார்கோவில் ஒன்றியத்தில் அவ்வாறு பதிவேற்றம் முடிக்காத அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாத ஊதியம் கிடைக்கவில்லை. ஆசிரியர்களின் விபரங்களை ஆன்லைன் பதிவேற்றம் செய்வதற்கு உரிய உட்கட்டமைப்பு வசதி அனைத்து கல்வி அலுவலகங்களிலும் இல்லை. பல அலுவலகங்களில் கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பிரவுசிங் சென்டர்களில் தான் அலுவலகப்பணிகள் செய்யப்படுகின்றன. கல்வி மாவட்டம் மாற்றப்பட்டதில் இருந்து அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறுகையில், ‘‘ஏற்கனவே அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் பள்ளி செயலர் கையொப்பம், மாவட்ட கல்வி அலுவலக அனுமதி என இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் மாதந்தோறும் தாமதமாகவே ஊதியம் பெற்று வருகின்றனர். மற்ற பணப்பலன்கள் கிடைப்பதும் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. அரசுப்பள்ளிகளைப்போல், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் 25ம் தேதிக்குள் மாத ஊதியத்திற்கான பில்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pulwama_kashmirthakuthal11

    காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

  • rafael_porvimanm1

    சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை

  • fruitsvegpala1

    லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • france_leaders123

    ஃபிரான்சின் நீஸ் திருவிழா : உலகத் தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தின் புகைப்பட தொகுப்பு

  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்