SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கண்மாய் குடிமராமத்து பணியில் கரையில் மண்ணை கொட்டி மோசடி கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை

9/7/2018 5:00:35 AM

சாயல்குடி, செப். 7: முதுகுளத்தூர் பகுதியில் கண்மாய் குடிமராமத்து பணியை முறையாக செய்யாமல் கரையில் மண்ணை கொட்டி மோசடி நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பணித்துறை மதுரை குண்டாறு வடிநில கோட்டம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.32 கோடியில் 64 கண்மாய்கள் புனரமைப்பு மற்றும் மதகுகள் புதுப்பித்தல், தேவையான இடங்களில் புதியதாக மதகு அமைத்தல் பணிகள் கடந்த ஜூன் 31ல் துவங்கி நடந்து வருகிறது.

மாவட்டத்தில் முதற்கட்டமாக முதுகுளத்தூர் உப கோட்டத்தின் சார்பில், திருவரங்கத்தில் ரூ.37.50 லட்சம், கண்ணத்தானில் ரூ.28.70 லட்சம், எஸ்.தரைக்குடியில் ரூ.73.30 லட்சம், கீழச்சிறுபோதில் ரூ.55.90 லட்சம், பேய்க்குளத்தில் ரூ.49 லட்சம். தத்தங்குடியில் ரூ.74.40 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. இக்கிராமங்களில் கண்மாயை முறையாக ஆழப்படுத்தாமல், சுமார் 2 அடி ஆழம் மட்டுமே வெட்டப்படுவதாவும், கரையில் போதுமான அளவு மண்ணைப்போட்டு, தண்ணீர் தெளித்து, ரோலர் கொண்டு சீரமைக்காமல், புழுதிமண்ணை கொட்டுவதால், சாலையில் மண் சரிந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் வெட்டப்பட்ட கருவேல மரங்கள் அகற்றப்படாமல் கண்மாய் உள்ளேயே கிடக்கிறது. இந்நிலையில் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறி, பில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பணம் வீணடிக்கப்பட்டதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘முதுகுளத்தூர் பொதுப்பணித்துறை உபகோட்டத்தில் குடிமராமத்து பணி முறையாக நடக்கவில்லை என பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது 25 சதவீத பணிகள் கூட முடியவில்லை, போலியாக கணக்கு காட்டி, முதற்கட்ட பில் வழங்கியுள்ளனர். கடந்த வாரம் முதுகுளத்தூர் பகுதியில் பெய்த மழையால் வெட்டப்பட்ட பள்ளங்கள் மறைந்து விட்டன. கரைகளும் சேதமடைந்து விட்டது. எனவே பணிகள் முழுமையாக நடக்காமல், பில் வழங்கக்கூடாது.

மழைக்காலம் துவங்குவதால் சிவகங்கை மாவட்டத்தில் இப்பணிகள் நடப்பதற்கு மதுரை உயர்நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்து, 2019 மார்ச் முதல் ஜூன் வரை பணிகளை செய்ய உத்திரவிட்டுள்ளது. இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் அடுத்தாண்டு கோடையில் பணிகளை துவங்க கலெக்டர் உத்திரவிடவேண்டும்’ என்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கண்மாய் கரையோரம் வாய்க்கால் தோண்டி, கரையை பலப்படுத்தியதற்காக முதற்கட்ட பில் வழங்கப்பட்டுள்ளது, தற்போது மடை, மதகு அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்ததாக சிெமன்ட் கட்டுமான பணிகள், கரையில் மணல் பரப்பும் பணிகள் நடக்கவிருக்கிறது. இதற்காக 5 கட்டமாக பில் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் பணிகள் முழுமையடைந்து, அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு பில் வழங்கப்படும். மேலும் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் இப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து விடும்’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jawa_studentelection123

  ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

 • thirupathisixbrammorcha

  திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

 • german_trainhydro

  ஜெர்மனியில் சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு.!

 • spain_hotelaccident123

  ஸ்பெயினில் நட்சத்திர ஹோட்டல் கட்டுமானப் பணியின் போது விபத்து - ஒருவர் பலி

 • 19-09-2018

  19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்