SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மழை வேண்டி, அம்மனுக்கு கறிச்சோறு படையல் சாயல்குடி அருகே வினோத வழிபாடு

9/7/2018 5:00:23 AM

சாயல்குடி, செப். 7:  சாயல்குடி அருகே மழைபெய்ய வேண்டி கிராமமக்கள் அம்மனுக்கு கறிச்சோறு படையிலிட்டு வினோத வழிபாடு நடத்தினர். சாயல்குடி அருகே உள்ள எஸ்.டி.சேதுராஜபுரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. நெல், மிளகாய், நிலக்கடலை போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 5 வருடங்களாக மழையின்றி விவசாயம் பொய்த்து போனதாலும், கண்மாய், ஊரணி வரண்டு போனதாலும் வீடுகளில் வளர்த்து வந்து கால்நடைகளை விற்று வந்தனர். வறுமையால் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்தாண்டு நல்ல மழை பெய்ய வேண்டும் என வேண்டி, இக்கிராமத்திலுள்ள அரியநாயகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த முட்டையிடும் நாட்டுக்கோழியை அடித்து, குத்தரசி சோறுடன் சமைத்து, ஊருக்கு வெளியே உள்ள அம்மனுக்கு படையிலிட்டு வழிப்பட்டனர். இதுகுறித்து சேதுராஜபுரம் பால்பாண்டியன், முத்துகிருஷ்ணன் கூறும்போது, ‘கடந்த சில வருடங்களாக மழையின்றி விவசாயம் பொய்த்துவிட்டது. எங்கள் ஊரில் உள்ள அரியநாயகி அம்மனுக்கு நாட்டுக்கோழி படையலிட்டால் மழை பெய்யும் என ஊர் பெரியவர்கள் கூறினர்.

இதனால் அரியநாயகி அம்மனுக்கு நேர்ந்துவிடப்பட்ட முட்டையிடும் நாட்டுக்கோழியை அடித்து, விதை நெல்லுக்கு சேமிக்கபட்டிருந்த குத்தரிசியுடன் சேர்த்து சமையல் செய்தனர். பிறகு சுமார் 300 குடும்பத்தின் பெண்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் முன் வைத்தனர். பின்பு கும்மி அடித்து, சிப்பளக்ககொட்டு அடித்து, அருளுடன், படையிலிட்டனர். பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிப்பட்டனர். படையலிட்ட பிரசாதத்தை கர்பிணி பெண்கள், மாற்றுதிறனாளிகள். முதியவர்களுக்கு கொடுத்துவிட்டு, பொது அன்னதானமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் இந்தாண்டு நல்ல மழைபெய்து, விவசாயம் செழிக்கும்என நம்புகிறோம்’ என்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்