SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீழக்கரையில் டூவீலர் மீது பஸ் மோதியதால் தகராறு நடுரோட்டில் பஸ் நிறுத்தம் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி

9/7/2018 5:00:16 AM

கீழக்கரை, செப். 7: கீழக்கரையில் அரசு பஸ் மற்றும் டூவீலர் மோதிய விபத்தால் தகராறு ஏற்பட்டு அரசு பஸ் நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதியைடந்தனர். ஏர்வாடியிலிருந்து காரைக்குடி செல்லும் அரசு பஸ் கீழக்கரை பஸ் ஸ்டாண்டிற்கு வந்தபோது வளைவில் டூவீலர் மீது பஸ் மோதியது. இதனால் கிழே விழுந்து காயமடைந்த டூவீலர் ஓட்டுனர் கிருஷ்ணன் ஆத்திரமடைந்து பஸ் டிரைவருடன் தகராறில் ஈடுபட்டார்.

இந்நிலையில் தன்னை தாக்கி விட்டதாகக் கூறி பஸ்சை நடுரோட்டில் நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கிச் சென்றார். இதனால் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர். தகவலறிந்து வந்த கீழக்கரை போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பினர். கீழக்கரை வளைவு பகுதியில் அடிக்கடி வாகன விபத்து நிகழ்ந்து வருகிறது. இதனை நிரந்தரமாக சரி செய்ய போக்குவரத்து போலீசாரை நியமிக் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்