SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தாலுகா அலுவலகத்தில் இருக்கை வசதிகள் இல்லை

9/7/2018 5:00:03 AM

பரமக்குடி, செப். 7: பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் போதுமான இருக்கைகள் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பரமக்குடி ஆற்றுப்பாலம் அருகே ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் பொதுப்பணித்துறை மூலம் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. பார்த்திபனூர், நயினார்கோவில், பாம்பூர் உட்பட சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் தினந்தோறும் பல்வேறு தேவைக்களுக்காக அங்கு வருகின்றனர்.

இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு போதுமான இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் தினந்தோறும் தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இருக்கைகள் இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் தாலுகா அலுவலகத்தின் முன்பு உள்ள வெளி வளாகத்தில் அமர்ந்து வருகின்றனர். நாளுக்கு நாள் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இருக்கைகள் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து நயினார்கோவிலை சேர்ந்த குமார் கூறுகையில், ‘தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் இதுநாள்வரை அவர்கள் அமர்வதற்கான இருக்கைகள் இல்லை. வேறுவழியில்லாமல் அவர்கள் அலுவலகத்தின் நுழைவு பகுதி வளாகத்தில் உட்கார்ந்து வருகின்றனர். முதியோர், பெண்கள் நலன் கருதி இருக்கை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்