SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஏர்வாடி மீனவ பெண்களுக்கு கடல்பாசி வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

9/7/2018 4:59:31 AM

கீழக்கரை, செப். 7: தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் இணைந்து மீனவ பெண்களுக்கான கடல்பாசி வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி ஏர்வாடி கல்பார் புயல் பாதுகப்பு கட்டிடத்தில் நடத்தியது. கடலில் மீனவளங்கள் குறைந்து வருவதால் மீனவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடாக கூண்டு முறையில் கடற்பாசி வளர்ப்பு குறித்த மேம்பாட்டு பயிற்சி ராமநாதபுரம் மண்டல மீன்துறை துணை இயக்குநர் காத்தவராயன் தலைமையில் நடைபெற்றது.

மண்டபம் முதன்மை விஞ்ஞானி ஈஸ்வரன், மீன்துறை உதவி இயக்குநர்கள் சிவக்குமார், கதிரேசன், சின்ன ஏர்வாடி மீன்துறை ஆய்வாளர் முருகேசன், சார்பு ஆய்வாளர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏலான்துறை கடல்பாசி வளர்ப்பு கணேசன், சின்ன ஏர்வாடி குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதுகுறித்து மண்டல மீன்துறை துணை இயக்குநர் காத்தவராயன் கூறுகையில், ‘வட்டத்தில் இம்மாதிரியான கடற்பாசி வளர்ப்பு பயிற்சி ஆயிரத்து 500 பேருக்கு அளிக்கப்படள்ளது. இதனால் மீனவ பெண்கள் கூடுதல் வருமானம் பெருவதற்கு அதிகளவு வாய்ப்பு உள்ளது’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்