SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம் கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரிக்கை

9/7/2018 4:59:17 AM

பரமக்குடி, செப். 7: பரமக்குடி ரயில் நிலையத்தில் விடுமுறை நாட்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இடம் கிடைக்காமல் ரயில் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, ராமேஸ்வரம் இடையே காலை, நண்பகல், மாலையில் தினமும் 11 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட நகர பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் சென்று திரும்புகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக பரமக்குடி ரயில் நிலையம் உள்ளது. பஸ் கட்டணத்தை விட ரயில்களில் குறைவு என்பதால் ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரயில்களில் தினமும் கூட்ட நெரிசலால் பயணிகள் பெரும்பாலானவர்கள் நின்றுகூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஒருசிலர் டிக்கெட் எடுத்த பின்னரும் வேறு வழியில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி பஸ்களில் செல்கின்றனர். பலர் பார்சல் ஏற்றப்படும் ரயில் பெட்டிகளில் தொற்றியபடி செல்கின்றனர். தினமும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில் ரயில்வே நிர்வாகத்தினர் மாற்று நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்க வில்லை.

பயணிகளின் நலன் கருதி கூடுதல் ரயில்கள் இயக்காவிட்டாலும் தற்போது இயங்கி வரும் பயணிகள் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பயணி ராஜேந்திரன் கூறுகையில், ‘கட்டணம் குறைவு, மேலும் உடல் அசதி இல்லாமல் செல்லலாம் என்ற எண்ணத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்புகின்றனர். ராமேஸ்வரத்தில் புறப்படும் ரயிலில் ராமநாதபுரத்திலேயே பல  தரப்பினரும் அனைத்து பெட்டிகளிலும் முழுவதுமாக ஏறிவிடுதால் ரயில் பரமக்குடி வரும்போது நிற்ககூட இடம் கிடைப்பதில்லை. இதே நிலைதான் மதுரையில் இருந்து புறப்படும் ரயிலுக்கும் உள்ளது. ரயில்வே நிர்வாகத்தினர் மாற்று நடவடிக்கை எடுத்து ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்