SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

9/7/2018 4:59:09 AM

பரமக்குடி, செப். 7: பரமக்குடியில் வரும் செப்.11ம் தேதி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி பரமக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகல் தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும் செப்.11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி உட்பட பல்வேறு தரப்பினரும் நினைவு அஞ்சலி செலுத்துவர். அஞ்சலிக்கு வரும் வாகனங்களின் வழித்தடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை இரண்டு கூட்டங்கள் நடந்துள்ளது.

இந்த வருடமும் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக பரமக்குடி 5 முனை சாலை, ஆர்ச் பகுதி, கொல்லம்பட்டறை தெரு, பஸ் ஸ்டாண்டு, இமானுவேல் சேகரன் நினைவிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்ட்ரோல் அறையில் இருந்து கண்காணிக்கவும், அசம்பாவிதங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை, எடுக்கவும் போலீசார் தரப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்