SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

9/7/2018 4:59:02 AM

ராமநாதபுரம், செப். 7:   பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான  அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (செப்.8) காலை 10 மணி முதல் ராமநாதபுரம் வட்டம் அச்சுந்தன்வயல், ராமேஸ்வரம் வட்டம் ராமேஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர் சாவடி, திருவாடானை வட்டம் மணலூர், பரமக்குடி வட்டம் போகலூர், முதுகுளத்தூர் வட்டம் மட்டியரேந்தல், கடலாடி வட்டம் மீனங்குடி, கமுதி வட்டம் நகரத்தார்குறிச்சி, கீழக்கரை வட்டம் பெரியபட்டிணம் ஆகிய கிராமங்களில் குறைதீர் கூட்டம் நடைபெறும். மக்கள் பொதுவிநியோகத் திட்டம் சம்பந்தமான குறைகள் மற்றும் மின்னணுகுடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம் போன்ற குறைகளை சரி செய்து கொள்ளலாம் என கலெக்டர்  அறிவித்துள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • franceworldleaders

    பிரான்சில் முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவுநாள்: உலகத்தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி

  • 13-11-2018

    13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்