SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகாரிகள் அலட்சியத்தால் இடிக்கும் நிலைக்கு வந்த அரசு பள்ளிக்கூடம்

9/7/2018 4:58:54 AM

தொண்டி, செப். 7: தொண்டி அருகே உள்ள சோழகன்பேட்டை அரசு பள்ளிக்கூடம் அதிகாரிகளின் அலட்சியத்தால் இடிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இது பொதுமக்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தொண்டி அருகே உள்ள சோழகன்போட்டை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி உள்ள இடம் தனக்குச் சொந்தமான இடம் என இதே பகுதியை சேர்ந்த சுலைகாபீவி என்வர் திருவாடானை தாசில்தார் மற்றும் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பார்ட்டியாக சேர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கை அரசு அதிகாரிகள் தொடர்ந்து நடத்தாதால் இறுதி தீர்ப்பில் பள்ளிக்கூடத்தை இடிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று கட்டிடத்தை இடிக்க ஆயத்தமானார்கள். தகவலறிந்த அப்பகுதி மக்கள் இடிக்க விடாமல் தடுத்தனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. நீதிமன்ற உதத்தரவின்படி இடிக்க வந்ததாக சுலைகாபீவி தெரிவித்தார். இதை அப்பகுதி மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதுகுறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து இடிப்பது தள்ளி வைக்கப்பட்டது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் அரசு பள்ளிகூடம் இடிக்கும் நிலைக்கு வந்துவிட்டதாக பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-04-2019

    22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்