SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாத்தேவர் குருபூஜை நினைவிடத்தில் அமைச்சர்கள் அஞ்சலி

9/7/2018 4:12:05 AM

உசிலம்பட்டி, செப். 7: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் உள்ள பி.கே.மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் 39வது குருபூஜையை முன்னிட்டு அமைச்சர்கள் முதல் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ, நீதிபதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அமமுக சார்பில்
கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன், மாவட்டசெயலாளர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சேதுராமன், துரை தனராஜன் உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்தினர். பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி தாளாளர் வாலாந்தூர் பாண்டியன் தலைமையில், கல்லூரிமுதல்வர் ஜோதிராஜன் உள்ளிட்டோர் பொங்கல் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய பார்வட்பிளாக் சார்பில் பி.வி.கதிரவன் தலைமையில், மாவட்ட செயலாளர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் ஐ.ராஜா, நகர் நிர்வாகி ஆச்சி ராஜா உள்ளிட்டோரும், பாரதிய பார்வட்பிளாக் சார்பில் கே.ஏ.முருகன்ஜி தலைமையில், தேனி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், இளைஞரணி செயலாளர் முகுந்தன் உள்ளிட்டோரும் அஞசலி செலுத்தினர்.  பாப்பாபட்டி பத்துதேவர் வகையறா முன்னேற்றச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் சின்னன், பொன்வாசுதேவன், சிவப்பிரகாசம், செல்வம் மற்றும் பி.கே.எம். இளைஞர்மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெபமணி, தேடாமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.  தேமுதிக சார்பில் தெற்குமாவட்ட செயலாளர் கணபதி தலைமையில், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், தென் இந்திய பார்வட்பிளாக் சார்பில் நிறுவனர் திருமாறன்ஜி, மாநில செயலாளர் சங்கிலி, பாஜக சார்பில் உசிலம்பட்டி பொறுப்பாளர் தங்கராஜ் அஞ்சலி செலுத்தினர்.

பாமக சார்பில் மாவட்ட மகளிர் இளைஞரணி ஷோபனா  தலைமையிலும், அகில இந்திய பார்வட்பிளாக் சந்தானம் பிரிவு நிர்வாகிகள் இளங்கோவன், சின்னக்காமன், மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில் மாவட்டசெயலாளர் சுதர்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய பார்வட்பிளாக்(பசும்பொன்) நிறுவனர் மணிகண்டன், மாநிலத்தலைவர் நவமணி அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழக தலைவர் மூர்த்தி, மாவட்ட இளைஞரணி மாரிராஜாஅஞ்சலி செலுத்தினர்.
இந்திய மக்கள் பார்வட்பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் சுரேந்திரன், சமாஜ்வாடி பார்வட்பிளாக் கட்சி மாநிலபொதுச்செயலாளர் அல்லிக்கொடி, மாநிலத்துணைத்தலைவர் தஞ்சை சசிக்குமார் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு  பேரவை மாநிலத்தலைவர் சி.சி.சாமி, மாநில பொதுச்செயலாளர் ராஜபாண்டி, வி.கே.சி, நடராஜன் அறக்கட்டளை சார்பில் மஞ்சுகணேஷ்தேவர், டி.இ.எல்.சி, பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கிரேஸிசந்திரா, முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகி திரவியம் அஞ்சலி செலுத்தினர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்