SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காளையார்கோவில் அருகே மண் சாலையாக மாறிய தார் சாலை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

9/6/2018 3:30:44 AM

காளையார்கோவில், செப். 6: காளையார்கோவில் அருகில் ஆண்டிச்சியூரணி கிராமம் வழியாக முடுக்கூரணி கருங்குளம் செல்லும் தார்ச்சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மண்சாலையாக மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் இருந்து ஆண்டிச்சியூரணி வழியாக மாத்துக்கண்மாய், கல்லுவழி, முடுக்கூரணி மற்றும் கருங்குளம் போன்ற கிராமங்களுக்கு செல்ல தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார்ச்சாலையை தினமும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலையில் இதுவரை எந்த பராமரிப்பு பணியும் மேற்கொள்ளவில்லை.

இதனால் இந்த சாலை தற்போது மேடு, பள்ளமாகவும், தார்கள் பெயர்ந்து ஜல்லி கற்களுடன் மண் சாலையாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் இரவில் டூவீலரில் வருபவர்கள் தொடர்ந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர். பகுதி மக்கள் கூறியதாவது, ‘நடந்து செல்வதற்கு கூட இந்த சாலை ஏற்றதாக இல்லை. இதனை சரிசெய்ய கிராமத்தினர் சார்பில் பலமுறை புகார் அளித்தும் எந்தப்பயனும் இல்லை. தேர்தல் நேரங்களில் ஓட்டு வாங்குவதற்காக புதிய சாலை அமைத்துத் தருவதாக வாக்குறுதி கொடுத்தார்கள். இதுவரையிலும் எந்தப்பணியும் நடைபெறவில்லை. புதிய ரோடு அமைக்காவிட்டாலும், பழைய ரோட்டையாவது சரிசெய்து தரவேண்டும்’ என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2018

    20-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்