SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.139.63 கோடியில் 838 குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

8/17/2018 4:53:49 AM

சென்னை: சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.139.63 கோடி செலவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும்  தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 838  குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், திருவள்ளூர் மாவட்டம், பாடிக்குப்பம் திட்டப்பகுதியில், தமிழ்நாடு அரசின் `சி’ மற்றும் `டி’ பிரிவு ஊழியர்களுக்காக சுயநிதி திட்டத்தின் கீழ், 2.42 ஏக்கர் பரப்பளவில், ரூ.69.57 கோடி செலவில் கட்டப்பட்ட 236 குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம்  திறந்து வைத்தார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் சுமார் 620 சதுர அடி முதல் 644 சதுர அடி வரை பரப்பளவு கொண்டதாகும். மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், முகப்பேர் ஏரி திட்டத்தில் உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், செவ்வாப்பேட்டையில் மத்திய வருவாய் பிரிவு தனி வீடுகள், சென்னை வேளச்சேரியில் மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், தஞ்சாவூர் மாநகரில் உள்ள குடிசைப்பகுதிகளில் வாழும் குடும்பங்களுள் ஒரு பகுதியினருக்கு தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி பகுதி-3 திட்டப் பகுதியில், 2.47 ஏக்கர் பரப்பளவில் 256 அடுக்குமாடி குடியிருப்புகள், ராமநாதபுரம், பட்டினம்காத்தான் திட்டப் பகுதியில், 3.07 ஏக்கர் பரப்பளவில் 256 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ.139.63 கோடி செலவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட 838 குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு
வேளச்சேரி: வேளச்சேரியில் 7,418 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், ரூ.2.19 கோடி மதிப்பீட்டில், வட்டாட்சியர் அலுவலர் அறை, இ-சேவை  மையம், ஆதார் மையம், தனி வட்டாட்சியர் அறைகள், பொதுமக்கள் காத்திருப்போர்  அறை, கூட்டரங்கம், வருவாய் ஆய்வாளர் மற்றும் நில அளவையாளர் அலுவலக அறைகள்  ஆகியவற்றை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலக  கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்