SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்பால் வழங்க ஏற்பாடு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

8/17/2018 4:53:23 AM

சென்னை: வளசரவாக்கம் எஸ்விஎஸ் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று முன்தினம் காலை ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்பகுதியில் வசிக்கும் சின்னத்திரை நடிகை கீதா அங்கு சென்று பார்த்தபோது, தொப்புள் கொடி கூட வெட்டப்படாத நிலையில் உயிருக்கு போராடியது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், குழந்தையை மீட்டு, போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குறைமாத பிரசவத்தில் பிறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் சந்தேகப்பட்டதால் தொடர்ந்து இங்குபேட்டரில் வைத்து குழந்தையின் இதயதுடிப்பை கண்காணித்து தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்துள்ளனர். தற்போது குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.

தகவலறிந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எழும்பூர் மருத்துவமனைக்கு நேரில் வந்து, குழந்தைக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் உள்ள தாய்பால் வங்கியில் இருந்து குழந்தைக்கு தாய்பால் வழங்கப்படும். பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தை என்பதால் தாய்பால் வழங்குவது அவசியம். பிறந்த குழந்தையை தொப்புள் கொடி கூட அகற்றாமல், வீசி சென்றது வேதனை அளிக்கிறது. ஆனாலும், அரசு மருத்துவமனையில் தேவையான தாய்பால் மற்றும் மருத்துவ உதிகள் அளிக்கப்படும். இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்