SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை வழக்கில் 6 பேர் கைது

8/17/2018 4:52:51 AM

சென்னை: அரும்பாக்கம் அசோக் நகரை சேர்ந்தவர் ஆதி (எ) ஆதித்தியன் (21),  ஆம்புலன்ஸ் டிரைவர். அதேபகுதி  என்.எஸ்.கே நகரை சேர்ந்த சந்தீப்குமார் (24) என்பவர் முன்விரோத தகராறில் தனது  கூட்டளிகளுடன் சேர்ந்து நேற்று முன்தினம் ஆதியை வெட்டி கொன்றார். அண்ணா நகர்  போலீசார் வழக்கு பதிந்து, சந்தீப்குமாரை கைது  செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பெரும்பாக்கம் முருகன் (22), ராஜா (27), அரும்பாக்கம் என்எஸ்கே நகர் கார்த்திக் (23), ஷெனாய் நகர் அரவிந்தகுமார் (எ)  அரவிந்தன் (23), சுருளி (எ) சிலம்பரசன் (21), ஐசிஎப் கக்கன்ஜி நகர் சபரிநாதன் (எ) சபரி (20) அகிய 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

* ஓட்டேரி திடீர் நகரில் கஞ்சா விற்ற சீனிவாசன் (25), சக்திவேல் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள இரண்டேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

* வியாசர்பாடி எழில் நகரை சேர்ந்தவர்  சஞ்சய் (20). இவர், நேற்று  முன்தினம் நண்பர்களுடன் மெரினா கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் மாயமானார். போலீசார், அவரை தேடிவருகின்றனர்.

* எழும்பூர் எத்திராஜ் லேனில் உள்ள கேளிக்கை விடுதி  ஒன்றில் சூதாட்டம் நடத்திய விடுதி மேற்பார்வையானர்  ரவி (49), அப்துல் குத்தூஸ் (47) உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

* மூவரசன்பட்டு பிரதான சாலையில் உள்ள கங்கை அம்மன் ஆலயத்தை நேற்று காலை பூசாரி குமார் திறக்க வந்தபோது,   பூட்டு உடைக்கப்பட்டு  உண்டியல் பணம், 2  வெள்ளி வேல், அம்மன் தாலி சரடு, மாங்கல்ய பொட்டு, நாணல் குழாய், கண்மலர்  உள்பட 6 சவரன் நகைகள்,  அம்மனுக்கு அணிவித்திருந்த  10 ஆயிரம் ரூபாய் நோட்டு மாலை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

* புளியந்தோப்பு வஉசி நகரை சேர்ந்தவர் நூருல்லா (28). இவரது தங்கை சம்சாத் (20), கணவரை பிரிந்து இவருடன் வசித்து வருகிறார். நூருல்லா நேற்று காலை வெளியில் சென்று வீடு திரும்பியபோது, பட்டாளம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (18) என்பவருடன் சம்சாத் நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த நூருல்லா, அரிவாளால் ஆகாஷை சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயமடைந்த ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சையளித்து வருகிறார். போலீசார் நூருல்லாவை கைது செய்தனர்.      

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • amazon_bang_111

  ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

 • northkorea_southkore

  வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

 • americatoday_flood123

  அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

 • pakistan_vehicls12345

  பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

 • jawa_studentelection123

  ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்