SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ராயப்பேட்டையில் 10 நாள் புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது

8/17/2018 4:52:08 AM

சென்னை: ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று முதல் அடுத்த 10 நாட்ளுக்கு புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர்  சண்முகம் சென்னையில் நேற்று கூறியதாவது: ராயப்பேட்டை மைதானத்தில் ஆகஸ்ட் 17 (இன்று) முதல் 27ம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. 200க்கும் அதிகமான அரங்குகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளது.

இன்று நடைபெற உள்ள துவக்க விழாவில்,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொள்கின்றனர். இதுதவிர கல்வியாளர்கள், பல்துறை வல்லுனர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. தமிழக நூலகங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக புத்தகங்கள் வாங்கப்படவில்லை. அரசுத்தரப்பில் நிதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ் பதிப்பகங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் நூலகங்களுக்கு நூல்களை வாங்க வேண்டும் என்று கல்வியமைச்சர், முதல்வரிடம் கோரிக்கை வைத்துளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்