SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் மழையால் கடல் போல் நிரம்பி காணப்படும் மூக்கனேரி

8/13/2018 4:26:58 AM

சேலம், ஆக.13: சேலத்தில் பெய்து வரும் மழையால் மூக்கனேரியில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.ஏற்காடு மலைப்பாதையில் பெய்யும் மழைநீர் அடிவாரத்தில் உள்ள புதுஏரிக்கு வருகிறது. அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் மூக்கனேரிக்கு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏரி மாசடைந்து, புதர்மண்டி கிடந்தது. சேலத்தை சேர்ந்த தனியார் அமைப்பினர் ஏரியை தூர்வாரி, 30க்கும் மேற்பட்ட இடங்களில் குன்றுகள் அமைத்தனர். அந்த குன்றுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

அந்த மரக்கன்றுகள் தற்போது நன்கு வளர்ந்து மரங்களாக காட்சியளிக்கின்றன. இந்த மரங்கள் பறவைகள் தங்குமிடமாக மாறியுள்ளன. மேலும் ஏரியில் ஏராளமான மீன்வளம் உள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சேலத்தில் பெய்யும் தொடர்மழையால் மூக்கனேரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் அருகில் உள்ள கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘மூக்கனேரி சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், கம்பு, ேசாளம் மற்றும் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதி விவசாயிகள் பெரும்பாலும் மூக்கனேரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால், ஏரி நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் மூக்கனேரியை சுற்றியுள்ள பகுதிகளில் கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இன்னும் ஆறு மாதத்திற்கு நல்ல முறையில் விவசாயம் நடக்கும்,’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்