SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருணாநிதி மறைவையொட்டி மாவட்டம் முழுவதும் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்

8/9/2018 2:31:16 AM

ஆத்தூர், ஆக.9: திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவையொட்டி ஆத்தூரில் அனைத்து கட்சியினர், மவுன ஊர்வலம் நடத்தினர். திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆத்தூர் திமுக நகர செயலாளர் பாலசுப்ரமணி, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் முருகேசன், பாமக மாவட்ட செயலாளர் நடராஜன், மதிமுக மாவட்ட செயலாளர் கோபால்ராஜ் ஆகியோர் தலைமையில் அனைத்து கட்சியினர் மற்றும் வணிகர்கள் சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர், மவுன ஊர்வலம் நடத்தினர். பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி ராணிப்பேட்டை, கடைவீதி, புதுப்பேட்டை, காமராஜனார் சாலை, அரசு மருத்துவமனை வழியாக 4 கி.மீ  தூரம் கடந்து மீண்டும், பேருந்து நிலையம் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில், மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளர் பன்னீர்செல்வம், முன்னாள் நகரமன்ற தலைவர் பூங்கொடி, மாணிக்கம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் ராஜாமணி, காசியம்மாள், கமால்பாஷா, ராஜசேகர், தங்கவேல், செந்தில், நாகராஜன், முருக.கண்ணன், கார்த்திகேயன், ரூபி.நாகராஜன், சம்பத், சாந்தி, பர்கத், கோட்டை குமார், பாஸ்கர், பாமக சார்பில் பச்சமுத்து, கண்ணன், மணிகண்டன், தமாகா மாவட்ட செயலாளர் காளிமுத்து, ஆசிரியர் செல்வம், வணிகர் சங்கத்தின் சார்பில் ராமகிருஷ்ணன், தாண்டவராயபுரம் பாஸ்கர் ஆகியோர் உள்பட 500க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டனர்.நரசிங்கபுரம் நகர திமுக செயலாளர் வேல்முருகன் தலைமையில், கருணாநிதியின் திருவுருவ படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், நகர துணை செயலாளர் மனோகரன், ரமேஷ், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நரசிங்கபுரம் நகராட்சி 11வது வார்டு தில்லை நகர் பகுதி திமுகவை சேர்ந்த சொக்கலிங்கம், நல்லதம்பி ஆகியோர் மொட்டை அடித்துக் கொண்டு ஈமகிரியை செய்தனர்.
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி, பாப்பாரப்பட்டி, நைனாம்பட்டி அதை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. ஆட்டையாம்பட்டி பேரூர் திமுக சார்பில், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகபிரகாஷ் தலைமையில் திமுகவினர் மவுன ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தினர். இடைப்பாடி: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, மாவட்டம் முழுவதும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ேமலும், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை காலமானார். இதை தொடர்ந்து நேற்று உடல் அடக்கம் சென்னை மெரினாவில் நடந்தது. நேற்று சேலம் மாவட்டத்தில் இடைப்பாடி, வெள்ளாண்டி வலசு, நாச்சூர், ஆவணியூர், தாவாந்தெரு, கவுண்டம்பட்டி, க.புதூர், மேட்டுத்தெரு, வெள்ளாளநாயக்கன்பாளையம், தாதாபுரம், சித்தூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, பூமணியுர், கல்வடங்கம், கோனரம்பட்டி, கோனசமுத்திரம், கன்னியம்பட்டி, எருமைப்பட்டி, கொங்கணாபுரம், தேவூர், செட்டிப்பட்டி, மூலப்பாதை, குள்ளம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், திமுக தலைவர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் இடைப்பாடி முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடியது. புதன்சந்தை, பஸ் ஸ்டாண்ட், ஆட்டோ, உள்ளிட்ட இடங்களில் டிஎஸ்பி அண்ணாமலை, அசோக்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஜோர்ஜி ஜார்ஜ் இடைப்பாடியில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china_cloning11

  செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

 • snow_river_falls11

  மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

 • christmas_planeealm1

  உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

 • sutrula_12Icehotel1

  சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

 • mumbai_theevibathu11

  மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்