SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆடித்திருவிழாவையொட்டி கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு

8/9/2018 2:31:05 AM

சேலம், ஆக.9: ஆடித்திருவிழாவையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனர்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில், கடந்த இருவாரத்திற்கு முன்பு ஆடி திருவிழா தொடங்கியது. கடந்த 6ம் தேதி இரவு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வைபவம் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. மாவட்டம் முழுவதிலும் இருந்து குடும்பம், குடும்பமாக வந்து கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டு வருகின்றனர். நேற்று காலை வரை விடிய, விடிய பொங்கல் வைத்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர். நேற்று காலையும் ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். சேலம் மாநகரத்தை சுற்றியுள்ள மாரியம்மன் கோயில்களில் இருந்து பக்தர்கள் மேள, தாளத்துடன் அக்னிகரகம் எடுத்து ஊர்வலமாக கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். அம்மனை தரிசனம் செய்து, நேர்த்திக்கடனை செலுத்தினர். சேலம் மாநகர், மாவட்ட முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஆடித்திருவிழா நடந்து வரும் குகை மாரியம்மன், காளியம்மன் கோயிலில் அம்மன்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
 அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், பட்டைகோயில் சின்னமாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோயில் உள்பட மாநகரத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் பொங்கல் வைத்தல் வைபவம் நடந்தது.குகை மாரியம்மன், காளியம்மன் கோயில், அம்மாப்பேட்டை பலப்பட்டரை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி சண்முகாநகர் மாரியம்மன், பொம்மனச்செட்டிகாடு மாரியம்மன், களரம்பட்டி ஜெகஜோதி அன்னதானப்பட்டி மாரியம்மன், வைத்தி உடையார் காடு மாரியம்மன், குமாரசாமிப்பேட்டை சக்தி மாரியம்மன், எஸ்.கொல்லப்பட்டி காளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தீ மிதிவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  தாரமங்கலம்: தாரமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணனூரில், மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் ஆடித்திருவிழா, கடந்த 22 நாட்களுக்கு முன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நேற்று நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தியும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து ேநர்த்திக்கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்